செய்திகள்

விஜய் சேதுபதியின் மகாராஜா: முதல் பார்வை வெளியீடு!

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

’குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ‘மகாராஜா’ எனப்பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது. 

இப்படத்தில் மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், மேலும், எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாகவும் தகவல் வெளியானது

இந்த நிலையில், மகாராஜா படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் விஜய் சேதுபதி கையில் அரிவாளுடன், ரத்தக் கறையுடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். தற்போது, இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT