செய்திகள்

ஜி.வி. பிரகாஷின் அடியே: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான அடியே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான அடியே படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் இரண்டு படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அடியே. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கெளரி கிஷன் நடித்துள்ளார்.

மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் ஆக.25-ல் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், அடியே திரைப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT