முகப்பு
செய்திகள்

துருவ நட்சத்திரம் அப்டேட் கொடுத்த படக்குழு!

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:00 AM
பகிர்:

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ்  இசையமைத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாளை படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு தெரிவிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.