செய்திகள்

வலிகளுடன் வாழப் பழகிவிட்டேன்: விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி தன் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

DIN

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற அக்.6 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தன் இளைய மகளுடன் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசியபோது ரத்தம் படத்தின் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.

பின், அவர் கலந்துகொண்ட நேர்காணல்கள் வெளியாகின. அதில், விஜய் ஆண்டனி, “வாழ்க்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என் வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்து விட்டேன். இப்போது, வலிகளுடன் வாழப் பழகிக்கொண்டேன். நான் பெரிய தத்துவவாதி இல்லை. ஆனால், இழப்புகளின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டேன்” என உருக்கமாகக் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் சில நாள்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் ஆம் ஆத்மி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஒரே நாளில் இருமுறை உயர்வு! ரூ. 89 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

தீபாவளிக்கு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பலே ரோஜா... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT