முகப்பு
செய்திகள்

100 வருட சாதனை: 3 நாள்களில் ரூ.390 கோடி வசூல் - இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த வாரத்தில் வெளியான படங்கள் 3 நாள்களில் ரூ.390 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Updated On : 14 ஆகஸ்ட் 2023, 5:21 pm IST
பகிர்:

தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது. 

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா ஷங்கர் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடார் 2, ஓஎம்ஜி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மூலமாக இந்திய அளவில் ரூ.390 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதாவது ஜெயிலர், கடார் 2, ஓம்ஜி2 மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்கள் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் ரூ.390 கோடிக்கும் அதிகமான வசூல். வார இறுதியில் இந்தியா முழுவதும் 2.10 கோடிக்கும் அதிகமான பேர் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளனர். 

இதையும் படிக்க: தனுஷ் 51: நாயகி அறிவிப்பு!

நமது சினிமா வரலாற்றில் கடந்த 100 வருடத்தில் இதுமாதிரி வார இறுதி வசூலினை பார்த்ததில்லை. மேலும் கடந்த 10 வருடத்தில் இவ்வளவு அதிகமான நபர்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கமர்ஷியல் சினிமா மக்களிடம் சரியாக சென்றுள்ளதை இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தெரிவிகின்றன. காலை காட்சிகள்கூட முழுவதுமாக நிரம்புகின்றன. இந்த வாரம் இந்திய சினிமாவின் கமர்சியல் சினிமாவை விரும்புவர்களுக்கு சிறப்பான வாரமாக அமைந்துள்ளது. புதிய பாய்ச்சலுடன் சினிமா இயங்குவது மகிச்சியளிக்கிறது. சினிமா கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மிக்க நன்றி” எனக் கூறியுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments