இயக்குநா் கே.விஸ்வநாத் (92) மறைவு
தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநா் கே.விஸ்வநாத் (92) ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை (பிப்.2) காலமானாா்.
தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இயக்குநா் கே.விஸ்வநாத் (92) ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை (பிப்.2) காலமானாா்.
1992-இல் பத்மஸ்ரீ, 2016-இல் தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றைப் பெற்றவா் இயக்குநா் கே.விஸ்வநாத். சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஸ்வா்ணகமலம் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியவா்; யாரடி நீ மோகினி, சிங்கம் 2, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளாா்.