மெளன ராகம் -2 தொடரின் நிறைவுப் படம்! இறுதிநாள் படப்பிடிப்பு தளத்திலிருந்து...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'மெளன ராகம் -2' தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அப்போது குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்று பகிரப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'மெளன ராகம் -2' தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அப்போது குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்று பகிரப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்களை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் உள்ளது.
படிக்க | 'கண்ணான கண்ணே' தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு! விடியோ வெளியிட்ட நாயகன்!
Advertisement
Advertisement
அந்தவகையில் 'மெளன ராகம் -2' தொடர் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டுவந்த தொடர். மெளன ராகம் முதல் பாகம் அளித்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2021 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் சக்தியாக ரவீனா தாஹா, கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜிவ் பரமேஸ்வர், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித், ஸ்ருதியாக ஷில்பா உள்ளிட்டோர் நடித்து புகழ் பெற்றனர்.
மனோஜ் குமார், எம்.ஆர். சரவணகுமார் என இரு இயக்குநர்கள் இந்தத் தொடரை இயக்குகின்றனர்.
இந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மார்ச் 4ஆம் தேதியுடன் தொடர் முடியும் எனக் கூறப்படுகிறது. இதானால் 'மெளன ராகம் -2' தொடரின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். அவர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக கடைசிநாளில் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
அந்தப் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.