முகப்பு
செய்திகள்

மாமன்னன் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!

மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

Updated On : 1 ஜூலை 2023, 5:02 pm IST
பகிர்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 

குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் - 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படத்தின் வெற்றி உறுதியானதால் உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

உதயநிதி நடித்த படங்களிலேயே இப்படமே அதிக திரையரங்களில்(700 திரைகள்) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.