இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல்
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.
ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான லவ் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: இணையத்தில் வைரலாகும் லவ் படத்தின் முன்னோட்ட காட்சி!
அதேபோல், எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள டைனோசர்ஸ் படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகிறது.