போஸ்டர் அறிவிப்புடன் துவங்கியது ‘லால் சலாம்’ படப்பிடிப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதனை சிறப்பு போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.