இணையத்தில் வைரலாகும் லப்பர் பந்து படத்தின் போஸ்டர்!
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நெஞ்சுக்கு நீதி படத்துக்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ஹரிஷ் கல்யான் மற்றும் அட்டகத்தி தினேஷ் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். வதந்தி வெப் தொடர் பிரபலம் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா விஜய் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், இப்படத்தில் பால சரவணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ரெய்டு படத்தின் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில், லப்பர் பந்து படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தின் டீசர், டிரைலர், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.