முகப்பு
செய்திகள்

அந்த 7 நாள்கள்... என்றும் அழியாத வசனம்!

நடிகர் பாக்யராஜ் பேசிய வசனம் குறித்து...

Updated On : 27 ஜூன் 2026, 7:00 pm IST
அந்த 7 நாள்களில் பாக்யராஜ்
பகிர்:

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பேசிய வசனம் இன்றும் மறக்கப்படவில்லை.

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, அவரின் திரைக்கதையும் வசனங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக பல இயக்குநர்கள் கருத்துகளைத் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

பாக்யராஜ் தன் திரைப்படங்களில் பொதுவாக முதல் 20 நிமிடங்களில் மையக்கருத்து என்ன? என்பதைக் கூறிவிட்டு மீதக்கதையைச் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வார். இந்த திரைக்கதை பாணிக்கு வசனங்களே கதையோடு ஒன்ற பெரிய பலமாக அமையும் என்பதால் ஒவ்வொரு காட்சியின் வசனங்களும் அடுத்தடுத்து வரும் முக்கியமான தருணங்களுக்கு ஒன்றிணையும்படி எழுதப்பட்டிருக்கும்.

Advertisement

Advertisement

அப்படி, பாக்யராஜின் அந்த 7 நாள்கள் திரைப்படம் அவர் இயக்கிய முக்கியமான படங்களில் ஒன்று. ஆரம்பக் காட்சியிலேயே நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டதைக் கூறிவிட்டு, பாலக்காடு மாதவனான பாக்யராஜுக்கும் நாயகிக்கும் காதல் எப்படி வளர்ந்தது என அடுத்தடுத்த காட்சிகளில் கூறிக்கொண்டே வருவார். இடைவேளைக்குப் பின் கதை முன்பை விட வலுவாக மாறும்.

இப்படம் ரசிகர்களைக் கவர்ந்த அளவைவிட இதில் பேசப்பட்ட வசனங்கள் இன்றும் கேலிக்காகவும் வசனத்தின் முக்கியத்துவம் என்ன என்பதற்காகவும் பேசப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

முக்கியமாக,”ஈ லோகத்தில் ஒரு யோக்கியன் உண்டெங்கில் அது இந்த பாலக்காடு மாதவன் ஆனு” (இந்த உலகில் ஒரு யோக்கியன் என்றால் அது இந்த பாலக்காடு மாதவன்தான்)

“என்ட காதலி நின்ட மனைவியாகலாம். பட்ஷே, நின்ட மனைவி என்ட காதலி ஆக முடியாது சாரே...” (என் காதலி உங்க மனைவியாகலாம். உங்க மனைவி என் காதலி ஆக முடியாது).

இந்த இரண்டு வசனங்களும் கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் மறக்கப்படாத வசனங்களாகவே தொடர்ந்து வருகின்றன.

The dialogue delivered by director-actor Bhagyaraj in the film Andha 7 Naatkal has not been forgotten even today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments