செய்திகள்

இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் கள்வன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஆனாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எஎந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

தியேட்டர் ரிலீஸ்:

ஜிவி பிரகாஷ்குமாரின் கள்வன் திரைப்படம் இன்று(ஏப். 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும், வல்லவன் வகுத்ததடா, வொயிட் ரோஸ், டபுள் டக்கர், ஒரு தவறு செய்தால், இரவிண் கண்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை(ஏப். 5) வெளியாகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் நாளை(ஏப். 5) வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ்:

ஹனுமான் திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிஸ்மத் என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை (ஏப். 5) வெளியாகிறது.

லம்பாசிங்கி என்ற தெலுங்கு திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த வாரம் தமிழ் திரைப்படங்கள் ஏதும் ஓடிடியில் வெளியாகவில்லை. ஆனால், முக்கிய திரைப்படங்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

SCROLL FOR NEXT