உழைப்பு வீணாகவில்லை: ஆடு ஜீவிதம் ரூ.100 கோடி வசூல்!
பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
உலகளவில் முதல்நாளில் ரூ.16 கோடி வசூலித்தது. தற்போது உலக அளவில் ஆடு ஜீவிதம் திரைப்படம் 9வது நாள் வசூலில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியை தாண்டியது. இந்த அபூர்வமான வெற்றிக்கு நன்றி.” எனக் கூறியுள்ளார்.
10 வருடங்களாக உழைத்தது வீண் போகவில்லை என்றும் ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.