செய்திகள்

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்: டீசர் அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது, சீதா ராமம் வெற்றியைத் தொடர்ந்து 'கிங் ஆஃப் கோதா' படத்தில் நடித்திருந்ந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் துல்கர் சல்மான், பின்னர் அப்படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியானது.

வெங்கி அட்லூரில் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படம் லக்கி பாஸ்கர். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் நாளை (ஏப். 11) வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT