செய்திகள்

ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘பிரேமலு’ அமல் டேவிஸ்!

பிரேமலு படத்தின் துணை நடிகர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

DIN

நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவான திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிரேமலு திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த ஏப்.12 ஆம் தேதி வெளியாகி, ஓடிடியிலும் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

இதில் நாயகனின் நண்பனாக நடித்த அமல் டேவிஸ் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் சங்கீத் பிரதாப். இவர் ஏற்கனவே ஹிருதயம், பத்ரோஷின்டே படப்புகள், லிட்டில் மிஸ் ராவத்தர் ஆகிய மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இந்தப் படத்தில்தான் அதிக நேரம் வந்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் கவனமும் பெற்றுள்ளார்.

ரீனு மாதிரி காதலி கிடைக்காவிட்டாலும் அமல் டேவிஸ் மாதிரியான நண்பன் கிடைத்தால் போதும் என ரசிகர்கள் மீம்ஸ்களில் பாராட்டி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT