செய்திகள்

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

DIN

வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையப்படுத்திய ‘வடக்கன்’ திரைப்படத்தின் டீசர் புதன்கிழமை வெளியாகியுள்ளது.

டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகிறார்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்டன் மகன்’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர்.

புதுமுகங்கள் நடித்துள்ள படம், வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றிய கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT