நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!
நடிகர் சங்க கட்டடத்துக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கினார் நெப்போலியன்.
நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றிய நெப்போலியன் சங்க கட்டடப் பணிக்காக ரூ. 1 கோடியை வைப்பு நிதியாய் வழங்கினார்.
முன்னதாக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜய் ஆகியோர் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு நன்றியைத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.