தக் லைஃப் படக்குழு 
செய்திகள்

சினிமாவில் 65 ஆண்டுகள்... கமல்ஹாசனைக் கொண்டாடிய தக் லைஃப் படக்குழு!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆகின்றன.

DIN

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து தக் லைஃப் படக்குழுவினர் அதனைக் கொண்டாடியுள்ளனர்.

1960 ஆக.12 ஆம் தேதி வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், இதுவரை 233 படங்களில் நாயகனாக நடித்து இந்திய சினிமாவின் தனித்துவமிக்க கலைஞராக இருக்கிறார்.

பல மொழிகளின் முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் கமல்ஹாசன் சினிமாவுக்குச் செய்த பங்களிப்பைப் பற்றி வியந்துகொண்டே இருக்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசன்

இறுதியாக, அவர் நடிப்பில் வெளியான கல்கி ஏடி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் கேலி, கிண்டல்களையும் சந்தித்தது.

தற்போது, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனை கைதட்டி வரவேற்று, சினிமாவில் அவரின் 65-வது ஆண்டுக்கான வாழ்த்துகளைத் தக் லைஃப் குழுவினர் பகிர்ந்துகொண்டனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT