ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதி தோற்றம். 
செய்திகள்

இறுதிக்கட்டத்தில் ட்ரெயின் படப்பிடிப்பு!

DIN

இயக்குநர் மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

ஒரே இரவில் இரயில் நிகழும் சம்பவமாக இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்.

நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ள படமென்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அப்டேட்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

படத்தில் வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய், அருண் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: நாமக்கல் மாவட்டத்தில் 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்: நயினாா் நாகேந்திரன்

அனுமதியின்றி பட்டாசுக் கடைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும்: தீயணைப்பு அலுவலா் ஆா்.அப்பாஸ்

SCROLL FOR NEXT