சார்பட்டா பரம்பரை போஸ்டர், பா.இரஞ்சித்.  
செய்திகள்

அரசியல் காரணங்களால் தேசிய விருதில் சார்பட்டா புறக்கணிப்பு: பா.இரஞ்சித் குற்றச்சாட்டு!

இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்துக்கு வேண்டுமென்றே தேசிய விருதுகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

DIN

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.

இதற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தங்கலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியதாவது:

சார்பட்டா பரம்பரை வெற்றிப் பெற்ற படமாக நாம் கொண்டாடும் அதே சமயத்தில் அதன் இரண்டாம் பாதி சரியில்லை என பலரும் விமர்சனம் செய்ததை பார்த்தோம். விருது விழாக்களில் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது.

கிரிட்டிக்ஸ் விருதில் சார்பட்டா பரம்பரை பல விருதுகள் பெற்றன. அப்படி வாங்கினால் நிச்சயமாக தேசிய விருதும் தருவார்கள். ஆனால் நம்முடைய தேசிய விருது பட்டியலில் சார்பட்டா பரம்பரை உள்ளேயே போக முடியவில்லை.

இந்த விருதுகளுக்கு சார்பட்டா பரம்பரை தகுதியில்லாததா? தனது கருத்தின் அடிப்படையில் இதை நிராகரிக்கிறார்கள். படத்துக்கு வெளியே நான் பேசும் கருத்துகளின் அடிப்படையில் இதையெல்லாம் ஒருவன் தீர்மானிக்கிறான்.

வேண்டுமென்றே எனது வேலையை மதிக்கக் கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

தங்கலான் திரைப்படத்தில் தங்கம் பூர்வக்குடிக்கு சொந்தமானது என்று படமாக்கியுள்ளார். இது நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT