செய்திகள்

கோட் படத்தின் புதிய பாடல் அப்டேட்!

கோட் படத்தின் புதிய பாடல் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.

DIN

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ 4 ஆவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.

முன்னதாக, விசில்போடு, சின்னச் சின்ன கண்கள், ஸ்பார்க் ஆகிய மூன்று பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் 4வது பாடல் வரும் 31 ஆம் தேதி வெளியாயிருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் மன வானில்... ஹிமா பிந்து!

Online Game-ல் பாலியல் துன்புறுத்தல்! தனது மகள் சந்தித்த சங்கடம் குறித்து Akshay kumar வெளிப்படை!

திருச்சி ஐஐஎம்-இல் நூலகப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிகாரில் நவ. 22க்குள் தேர்தல் - வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம்

ஓ மணப்பெண்ணே... பரமேஸ்வரி!

SCROLL FOR NEXT