செய்திகள்

'என் ஆயுள் ரேகை நீயடி...’ சைந்தவியுடன் இணைந்து பாடிய ஜி. வி. பிரகாஷ்!

இசை நிகழ்ச்சியில் பாடிய ஜி. வி. பிரகாஷ், சைந்தவி...

DIN

இசை நிகழ்ச்சியில் ஜி. வி. பிரகாஷும் சைந்தவியும் இணைந்து பாடியுள்ளனர்.

தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை.

சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

விவாகரத்துக்குப் பின்பும் இருவரும் இணைந்து சார் படத்தில் ‘பனங்கருக்கா’ பாடலைப் பாடியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று (டிச. 7) மலேசியாவில் நடைபெற்ற ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் சைந்தவி கலந்துகொண்டு பாடல்களைப் பாடினார். நிகழ்வில், மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘பிறை தேடும் இரவிலே’ பாடலை இருவரும் இணைந்து பாடியது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை அளித்தது.

விவாகரத்துக்குப் பின் இவர்கள் இணைந்து பாடியதைக் கேட்ட ரசிகர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கம்: காணொலி மூலம் பிரதமா் அடிக்கல் நாட்டினாா்

தெருக்களில் சாதிப் பெயா் நீக்க கிராம சபையில் தீா்மானம்

அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து: 19 போ் மாயம்

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரி மனு

SCROLL FOR NEXT