ருக்மணி வசந்த் பிறந்த நாளில் ’ஏஸ்’ கிளிம்ஸ்!
விஜய் சேதுபதியின் ஏஸ் பட கிளிம்ஸ்...
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் மிஷ்கின் இயக்கி வருகிறார்.
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படமான ஏஸ் (Ace) இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
இதையும் படிக்க: இப்படியொரு பாடல் உருவாக இளையராஜாவிடம் மகேந்திரன் என்ன சொன்னார்?
இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று நடிகை ருக்மணி வசந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கான கிளிம்ஸ் விடியோவை ஏஸ் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.