புஷ்பா 2 
செய்திகள்

வசூல் வேட்டை நடத்தும் புஷ்பா 2!!

புஷ்பா 2 படத்தின் முதல் நான்கு நாள்கள் வசூல் விவரம்...

DIN

புஷ்பா - 2 திரைப்படத்தின் நான்கு நாள்கள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்து சாதனை படைத்தனர்.

முதல் நாள் வசூலா ரூ. 294 கோடியை ஈட்டியிருந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நான்கு நாள்கள் வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது.

முதல் நான்கு நாள்களில் (ஞாயிற்றுக்கிழமை வரை) மட்டும் ரூ. 829 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக ரூ. 800 கோடி வசூலை கடந்த இந்திய படமாக புஷ்பா 2 உருவெடுத்துள்ளது.

மேலும், 5-ஆம் நாளான நேற்று, 900 கோடி ரூபாயை கடந்து வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT