குடும்பஸ்தன் போஸ்டர் 
செய்திகள்

குடும்பஸ்தன் படத்தின் அப்டேட்!

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.

DIN

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே. மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளைத் தேடும் நடிகரான மணிகண்டன் இப்படத்திலும் கவனம் பெறுவார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT