விக்ரம் 63 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு படம்: எக்ஸ் / சாந்தி டாக்கீஸ்.
செய்திகள்

விக்ரம் 63: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

DIN

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63ஆவது படத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார்.

தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றதுடன் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

இந்த நிலையில் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நடிகர் விக்ரமை வைத்து மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்குகிறார்.

இதனை போஸ்டர் வெளியிட்டு சாந்தி டாக்கீஸ், “ இந்த நாட்டின் சிறந்த நடிகருடன் எங்களது 3ஆவது தயாரிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். திரைப் பயணத்தில் மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுத்தவரும் பாதையை மாற்றும் படங்களைக் கொடுத்த நடிகருடன் இணைவது கௌரவமாக கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT