காயமடைந்த ராணவ்  நன்றி: vijay tv
செய்திகள்

பிக் பாஸ் 8: தூக்கி வீசிய ஜெஃப்ரி! மருத்துவமனையில் ராணவ்!

பிக் பாஸ் போட்டியில் டாஸ்கின்போது காயமடைந்த ராணவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

DIN

பிக் பாஸ் போட்டியில் டாஸ்கின்போது காயமடைந்த ராணவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 10 வாரங்களைக் கடந்துள்ளது. 11-வது வாரம் விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது. இதில், போட்டியாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட டாஸ்க் ஒன்றில் ராணவை தடுக்கும் ஜெஃப்ரி ஒரு கட்டத்தில் அவரை கீழே தள்ளிவிடுகிறார்.

அதில் ராணவ் காயமடைந்து கடும் வலியில் துடித்துக் கொண்டிருந்தபோது, அவர் நடிக்கிறார் என்று சில போட்டியாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு மத்தியில், ராணவை மருத்துவ அறைக்கு விஷால், அருண் உள்ளிட்டோர் அழைத்துச் செல்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராணவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த செய்தியை போட்டியாளர்களிடம் பிக் பாஸ் அறிவிக்கும் ப்ரோமோ செவ்வாய்க்கிழமை காலை வெளியாகியுள்ளது.

மேலும், ராணவ் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்பியுள்ளதாகவும், அவர் சிறிது நாள்கள் டாஸ்கில் பங்கேற்காமல் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பொம்மை டாஸ்கின்போது ஜெஃப்ரி, ராணவ் மற்றும் ரயான் ஆகியோர் அடித்துக் கொள்வார்கள். அப்போதே அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இறுதி எச்சரிக்கையை தொகுப்பாளர் விஜய் சேதுபதி விடுத்திருப்பார்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ள ஜெஃப்ரி, வேண்டுமென்று செய்தாவாரா? அல்லது தெரியாமல் செய்தாரா? எனத் தெளிவாக தெரியவில்லை.

வேண்டுமென்று தள்ளிவிட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில், இந்த வார இறுதியில் ஜெஃப்ரிக்கு எச்சரிக்கை அட்டையை விஜய் சேதுபதி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT