நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போஸ்டர்.  
செய்திகள்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் 3ஆவது பாடல்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 3ஆவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 3ஆவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பாரா பாடல் இதுவரை யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வருகிற பிப்.7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது.

இரண்டாவது பாடலான காதல் ஃபெயில் பாடல் சுமாரான வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் ‘ஏடி’ என்ற 3ஆவது பாடல் டிச.20ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT