முகப்பு
செய்திகள்

இயக்குநர் பாலாவின் வெள்ளிவிழாவில் சூர்யா!

பாலாவுக்கான விழாவில் சூர்யா பங்கேற்பதாகத் தகவல்...

Updated On : 18 டிசம்பர், 2024 at 11:22 AM
பகிர்:

நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவின் திரையுலக வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்வும் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

இதில், நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் உள்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் பாலாவுக்கான விழாவில் கலந்துகொண்டு அவரை வாழ்த்திப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நந்தா, பிதாமகன் படங்களின் மூலம் சூர்யாவின் திரைவாழ்க்கையை மாற்றிய இயக்குநரான பாலா வணங்கானில் சூர்யாவுடன் இணைந்தார்.

ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து சூர்யா விலக அருண் விஜய் நாயகனாக நடித்தார். தற்போது, பழைய கசப்புகளை மறந்து பாலாவுக்கான விழாவில் சூர்யா கலந்துகொள்ள உள்ளார் என்கிற தகவல் ரசிகர்களிடம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.