அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா / ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் 
செய்திகள்

ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் இந்தியத் திரைப்படம்!

ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம்

DIN

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியத் திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தைத் தனது விருப்பப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆண்டுதோறும் தனக்குப் பிடித்த பாடல்கள், புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்வார்.

இந்த ஆண்டும் அதுபோல தனக்குப் பிடித்தப் படங்களாக அவர் வெளியிட்டப் பட்டியலில் இந்தியத் திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய இந்தத் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, நவ. 22ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது.

இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தோ-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பாக உருவான இப்படம் பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படம் வென்றது.

மேலும், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் செவிலியராகப் பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படம் பெரியளவில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் விருப்பப் பட்டியலிலும் இருப்பது இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT