விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!
விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறுவதாக இருந்த விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந்தது.
‘விஜய் ஆண்டனி 3.0’ இசைக் கச்சேரிக்கு செல்லும் பாா்வையாளா்கள் கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்ததும் குறிப்பிட்டிருந்தது.
Advertisement
Advertisement
தற்போது, காவல்துறையினரின் அறிவுரையின் பேரில் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. .
விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்ததாவது:
வணக்கம் நண்பர்களே,
சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 இசை நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும்.
உங்கள் விஜய் ஆண்டனி எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.