நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், மகேஷ் பாபு, வருண் தவான் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பேபி ஜான் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதையும் படிக்க: ராம் சரணுக்கு 256 அடி கட் - அவுட்!
சில நாள்களுக்கு முன் தன் காதலர் ஆண்டனியை கோவாவில் திருமண செய்துகொண்ட கீர்த்தி, பேபி ஜான் புரமோஷன் நிகழ்வுகளில் தாலியுடன் கலந்துகொண்டு வைரலானார்.
இந்த நிலையில், திருமண வாழ்விற்கு நேரம் ஒதுக்க திட்டமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் சினிமாவிலிருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக, இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய திரைப்படம் வெளியாகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.