செய்திகள்

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த குறிச்சி மடதாபெட்டி பாடல்!

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடித்துள்ள குண்டூர் காரம் படத்திலிருந்து குறிச்சி மடதாபெட்டி பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

DIN

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரபல நடிகர் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் நாள் வெளியானது.  

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.  நடிகைகள் ஸ்ரீ லீலா,  மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.  படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

இப்படத்தின் 3வது பாடலான குறிச்சி மடதாபெட்டி எனும் பாடல் ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது. இதன் லிரிக்கல் விடியோ பாடல் 82 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது. 

இந்தப் பாடலுக்கு திரையரங்குகளிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 1 மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான பேர் ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று மாலை வெளியான குறிச்சி மடதாபெட்டி முழு பாடல் விடியோ யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. 

நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்நாளில் இவ்வளவு கஷ்டப்பட்டு நடனம் ஆடவில்லை எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 போ் விடுதலை: யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது - மும்பை உயா்நீதிமன்றம்

ஜி.கே.மணி குற்றச்சாட்டுக்கு அன்புமணி தரப்பு பதில்

20 ஆண்டு பணிக்காலத்துக்குப் பின் விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஊதியம்

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பை போற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT