செய்திகள்

மெட்ராஸ்காரன் படத்தில் இணைந்த நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள்!

மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் தமிழ்ப்படத்தில் தெலுங்கு நடிகை நாயகியாக இணைந்துள்ளார். 

DIN

எஸ் ஆர் புரடக்‌ஷன் சார்பில் பி. ஜகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. 

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தெலுங்கு நாயகி நிஹாரிகா கொனிடேலா இணைந்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணமான 2 ஆண்டுகளுக்குப் பிறகு சைதன்யா ஜொன்னலகட்டாவை விவாகரத்து செய்வதாக நிஹாரிகா கொனிடேலா சமீபத்தில் அறிவித்தார். 

தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து, தமிழுக்கு வந்திருக்கிறார் நாயகி நிஹாரிகா. தெலுங்கில் நாயகியாக அறிமுகமான நிஹாரிகா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். இணையத் தொடர்கள் என பல படைப்புகளை தயாரித்து வருகிறார். தற்போது தமிழில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம் ஜோடியாக “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம்.  ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்னையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். 

ஷேன் நிகாம்-இன் வெற்றி பெற்ற ஆஎடிஎக்ஸ் படத்தின் போஸ்டர்

தற்போது படத்தின் முன்தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறன. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில்,  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் இப்படம் உருவாகவிருக்கிறது. படம்  பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக சரிவு

மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT