செய்திகள்

சிம்பு 48: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 48வது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கிவருகிறார்.  

சமூக வலைதளங்களில் சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் தீபிகா படுகோன்  நடித்தால்  இது அவருக்கு இரண்டாவது தமிழ் படமாக இருக்கும். முதல் படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் சிம்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ஸ்டைலாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை படக்குழு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சலார் படத்தின் வெளியீட்டில் ரவி பஸ்ரூர் பிஸியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. சிம்புவுக்கு நாளை 40ஆவது பிறந்தநாள் எனப்து குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போஸ்டரில் 2 சிம்பு இருப்பது போன்ற அட்டகாசமான போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT