செய்திகள்

புதிய தொழில் துவங்கிய நடிகை சினேகா! 

நடிகை சினேகா தனக்கு மிகவும் பிடித்தமான புதிய தொழிலை தொடங்கியுள்ளார். 

DIN

தமிழில் ஆனந்தம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சினேகா. பின்னர் கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரதான நடிகையாக வலம் வந்தார். 

2012இல் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். 

திருமணத்துக்குப் பிறகு படங்களில் சரியாக நடிக்காமல் இருந்த சினேகா தனுஷுடன் 2020இல் பட்டாசு படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார். 

சினிமாவில் இருந்து வாய்ப்புகள் குறையும்போது நடிகைகள் தொழில் துவங்குவது சாதராணமானது. ஏற்கனவே நடிகை தமன்னா, காஜல் அகர்வால், நயன்தாரா ஆகியோர்கள் தங்களுக்கென தனியாக வருமானம் ஈட்டும் தொழில்களை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை தி.நகரில் தான் புதிய தொழிலை துவங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார். அதில், “ எனது ப்ரியமான ரசிகர்களே நீங்கள் எனது சினிமா, வாழ்க்கையில் இதுவரை தலைசிறந்த ஆதரவு அளித்துள்ளீர்கள். இத்தனை ஆண்டுகளாக என் மீது காட்டிய அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். யாருக்கும் அவர்களது கனவு நனவாகும் தருணம் சிறப்பான ஒன்று. நான் தற்போது அந்த தருணத்தில் இருக்கிறேன். நான் எனது சில்க் புடவைக்கான ‘சினேகாலயா சில்க்ஸ்’ எனும் கடையை திறந்திருக்கிறேன். எப்போதும்போல உங்களது அன்பையும் ஆசிர்வாதத்தையும் வேண்டிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். 

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT