செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் துல்கர் சல்மான்?

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

DIN

நடிகர் விஜய் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது.

அதன்பிறகு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்றார்.

தொடர்ந்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கு ஒருமுறை கதை சொல்லியிருந்தார். ஆனால், நடிப்பில் ஈடுபாடில்லை என்றும் இயக்குநராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சய், சில குறும்படங்களையும் இயக்கினார்.

சமீபத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் நாயகனாக நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, துல்கர் சல்மான் நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT