செய்திகள்

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் புதிய டிரைலர்!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

கௌதம் மேனன் இயக்கத்தில் கிருஷ்ணா, பிக்பாஸ் வருண், ராஹேய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்துக்கு பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியது.

இந்தப் படத்தின் டிரெய்லர் கௌதம் மேனனின் முந்தைய படங்களான அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் மார்ச்.1ஆம் தேதி வெளியாகுமென சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. மக்களிடையே இந்த டிரைலர் கவனம் ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT