கோப்புப்படம் 
செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகிய இரு பிரபலங்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இரு பிரபலங்கள் விலகியுள்ளது அந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் இம்முறை இதுவரை வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த புதிய சீசனில் போட்டியாளர்களாக நடிகை வடிவுக்கரசி, நடிகை தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் ஹேமா, பிக் பாஸ் பிரபலம் விஷ்ணு விஜய், நடிகை மாளவிகா மேனன், நடன இயக்குநர் ஸ்ரீதரின் மகள் அக்‌ஷதா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களில் நடுவர்களாக பங்கேற்ற சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளர்.

குக் வித் கோமாளி சீசன் 5-ல் இருந்து விலகுவதாக தாமு, வெங்கடேஷ் பட் விடியோவொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். விரைவில் புதிய நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்திக்கவுள்ளதாக விடியோவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT