செய்திகள்

பிரபல தொடரிலிருந்து விலகிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!

இனியா தொடரில் நடித்துவரும் ப்ரீத்தா ரெட்டி அத்தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

காற்றுக்கென்ன வேலி, சிவகாமி உள்ளிட்ட தொடரிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் சுருதி பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. சிறகடிக்க ஆசை தொடரை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் சுருதி பாத்திரம் இத்தொடருக்கு வலுவானதாக அமைந்துள்ளது.

அதேபோல், ப்ரீத்தா ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நாயகனின் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இத்தொடரிலும் இவர் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார்.

ப்ரீத்தா ரெட்டி

இந்நிலையில், இரு தொடர்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க முடியாமல் இருப்பதால், இனியா தொடரில் இருந்து ப்ரீத்தா ரெட்டி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனியா தொடரை விட சிறகடிக்க ஆசை தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பதால், ப்ரீத்தா இனியா தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT