செய்திகள்

தாப்ஸிக்குத் திருமணம்!

DIN

ஹிந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் தாப்ஸி பன்னு. தமிழில், ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரம்பம், கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தாப்ஸி தன் காதலர் மதியாஸ் போ என்பவரைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தாப்ஸியும் மதியாஸ் போவும் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர்.

தற்போது, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இத்திருமணம் மார்ச் மாத இறுதியில் உதய்பூரில் சீக்கிய - கிறிஸ்துவ முறைப்படி நிகழ உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தாப்ஸி தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. டென்மார்க்கைச் சேர்ந்த மதியாஸ் போ இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பேட்டிங்: முதலிடத்துக்கு முன்னேறுமா?

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

பறக்கும் உயிர்! ஹன்சிகா..

சென்னைக்கு மழை எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

SCROLL FOR NEXT