செய்திகள்

ரூ.400 கோடியை தாண்டிய டன்கி: படிப்படியாக குறைந்த சலார் படத்தின் வசூல்!

பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தின் வசூல் படிப்படியாக குறைந்து வருகிறது. 

DIN

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம் டிச.22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. ஜனவரி 1ஆம் தேதி வரை ரூ. 625 கோடி வசூலித்ததாக படக்குழு கூறியது. 

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் கடந்த டிச. 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

உலகளவில் வெளியான இப்படம் இதுவரை விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுது. 

இந்நிலையில் டன்கி படக்குழு இதுவரை ரூ. 409 கோடி வசூலித்துள்ளதாக கூறியுள்ளது. 

சலார் படம் ஆக்‌ஷன் படம். மாஸ் ஓபனிங் இருந்தும் படிப்படியாக வசூல் குறைந்து வருகிறது. டன்கி ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமலே 400 கோடி ரூபாயை தாண்டி இருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT