செய்திகள்

கோட் படத்தில் இளையராஜா! இதற்காகவா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் கோட் படத்தில் இளையராஜா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு, கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - The Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணைந்து ஒரு பாடலைப் பாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்பாடலை கங்கை அமரன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, 2001 ஆம் ஆண்டில் சித்திக் இயக்கத்தில் வெளியான விஜய்யின் பிரெண்ட்ஸ் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் இளையராஜா பாட இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT