செய்திகள்

ஓடிடியில் காதல் தி கோர்!

மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் உருவான ‘காதல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

DIN

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த நவ.23 ஆம் தேதி வெளியானது.

அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.

ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக, ஜார்ஜ் கடந்த சில ஆண்டுகளாக தங்கன் என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் எனக் குறிப்பிடுகிறார். இந்தக் குழப்பங்களிலிருந்து ஜார்ஜ் எப்படி மீள்கிறார், தன்பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினர் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளுடன் உருவாகியிருக்கிறது காதல் - தி கோர்.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஓடிடியில் ஹாய் நான்னா!

உலகளவில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தைக் கட்டணம் செலுத்தி பார்க்கும்படியே வெளியிட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கி மோசடி: சிபிஐ தொடா்ந்த வழக்கில் மூவருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை

செவித்திறன் குறைபாடு: ஏஐ மூலம் கற்பிக்க பயிற்சி வழங்கும் செம்மொழி நிறுவனம்

போக்குவரத்து மாற்றம்

20 செ.மீ. மழையையும் எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

விக்டோரியா பொது அரங்கு புனரமைப்புப் பணி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT