செய்திகள்

இவ்வளவு காலம் சினிமாவில் நீடிக்க அழகு மட்டுமே காரணமில்லை: கத்ரீனாவை புகழ்ந்த விஜய் சேதுபதி!

மெரி கிறிஸ்துமஸ் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 

DIN

'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது. இப்படம் பொங்கல் வெளியீடாக 2024, ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று  படக்குழு தெரிவித்தது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகியது.  

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, “ கத்ரீனா கைஃப் மிகவும் அழகானவர். நான் அவரது பெரிய ரசிகர். அவருடன் நடிப்பேன் என நினைக்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. அவர் இவ்வளவு காலம் சினிமாவில் நீடிக்க அழகு மட்டுமே காரணமில்லை. அதையும் தாண்டி அவர் அனைத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளக்கூடியவர். ஒரு காட்சியை எப்படி சிறப்பாக மாற்ற முடியுமோ அதற்காக மெனக்கெடுவார். அவரது இந்த உழைப்பும் புரிதல் திறனும்தான் அவரை இவ்வளவு நாள் சினிமாவில் நீடிக்க வைத்திருக்கிறது” எனக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT