கோப்புப்படம் 
செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி

கேப்டன் மில்லர் படத்தை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

கேப்டன் மில்லர் படத்தை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், கேப்டன் மில்லர் படத்தை பாராட்டிய சகோதரர் உதயநிதிக்கு நன்றி. உங்களுக்கு பிடித்த கலையை பாராட்டுவதற்கு நீங்கள் எப்போதும் தவறியதில்லை. கர்ணன் படத்தை நீங்கள் பாராட்டியது எனக்கு நினைவில் இருக்கிறது. உங்களின் பாராட்டு எனக்கும் படக்குழுவினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விமர்சக ரீதியாகவும் படத்திற்கு நல்ல மதிப்பு கிடைத்துள்ளது. இதையொட்டி அமைச்சர் உதயநிதி கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்தினை பகிர்ந்திருந்தார்.

அமைச்சர் உதயநிதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் நடிகர் தனுஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT