நடிகர் தனுஷ் - இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ஆக்சன் பாணியில் உருவான கேப்டன் மில்லர் பொங்கல் வெளியீடாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆலய நுழைவுப் போராட்டம், அதிகாரத்துக்கு எதிரான புரட்சி என உருவான இப்படம் நேற்று (ஜன.12) பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலகளவில் ரூ.17 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.