செய்திகள்

பிக் பாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்த அர்ச்சனா!

பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக வைல்டு கார்டில் நுழைந்த போட்டியாளர் ஒருவர் வெற்றி(டைட்டில் வின்னர்) பெற்றுள்ளார்.

DIN

பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக வைல்டு கார்டில் நுழைந்த போட்டியாளர் ஒருவர் வெற்றி(டைட்டில் வின்னர்) பெற்றுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் இன்று நிறைவடையவுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். பூர்ணிமா ரவி ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியுடன் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இறுதி வாரத்துக்கு விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி, விஜய்வர்மா தேர்வாகினர். அதில் விஜய் வர்மா மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் விஷ்ணு மற்றும் தினேஷ் வெளியேறினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு அர்ச்சனா, மாயா, மணிச்சந்திரா ஆகியோர் சென்ற நிலையில், மாயா 3 ஆம் இடத்தையும், மணிச்சந்திரா 2 ஆம் இடத்தையும் பெற்றனர்.

அதிகவாக்குகள் பெற்று அர்ச்சனா இப்போட்டியின் வெற்றியாளராகி உள்ளார். இதுவரை எந்த மொழி பிக் பாஸிலும் மற்றும் பிக் பாஸ் தமிழ் சீசன்களில் இல்லாத வகையில், வைல்டு கார்டு போட்டியாளர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

அதேபோல், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் டைட்டில் வென்ற இரண்டாவது பெண் போட்டியாளராக அர்ச்சனா உள்ளார் .  பிக் பாஸ் இரண்டாவது சீசனை ரித்விகா வென்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT