செய்திகள்

ஜெயிலர் - 2 உறுதி?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது. 

இதனால், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காசோலை வழங்கியதுடன் சொகுசுக் கார்களையும் பரிசளித்தார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயத்தையும் பரிசாகக் கொடுத்தார்.

தற்போது, ரஜினி த.செ.ஞானவேல் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் தன் அடுத்த படத்தின் கதை பணிகளில் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT